Monday, July 23, 2012

சைக்கிள் புரட்சி


நாட்டில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது . அண்டார்டிக் கண்டம் புவி வெப்பமடைவதால் உருகி கொண்டு இருக்கிறது.கடல் மட்டம் உயர்கிறது, புவியின் சராசரி வெப்பமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது

இதற்கெல்லாம் யார் காரணம் ?..நாம் தானே ..இன்று மிதிவண்டி இல்லாத வீடு கூட இருக்கிறது , பைக் இல்லாத நடுத்தர வீட்டை பார்க்கவே முடியவில்லை.அருகில் இருக்கும் கடைக்கு போக கூட பைக் பயன்பாடு அதிகரித்து உள்ளது

அது மட்டுமா ?? இன்று பல இளைஞர்கள் வீடு கட்டுவதையும் தாண்டி .. தனக்கென ஒரு கார் வாங்குவதையே வாழ்க்கையில் SETTLEஆவது என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்

சாலையில் காற்று கூட புக முடியாத அளவுக்கு வாகனங்கள் நெருக்கிக் கொண்டு செல்கிறது ..ஊரெல்லாம் மாசு ..சுவாசிக்கும் காற்றில் மாசு...குடிக்கும் தண்ணீரில் மாசு...நாசித்துவாரங்களில் எந்நேரமும்  படிக்கிறது தூசு

இதற்கு தீர்வு என்ன ???..

சைக்கிள்

உங்களுக்கு இதைக் கேட்டால் சிரிப்பு வரும் ஆனால் பதில் சைக்கிள் தான்

சற்று ஆழ்ந்து யோசித்தால் 60% மக்கள் தினமும் இருபது கிலோ மீட்டர்கு மேல் பயணம் செய்வதில்லை.நாம் ஏன் அந்த பயணத்தை சைக்கிளில் செய்யக்கூடாது ??

யோசித்துப்பாருங்கள் ...நாம் சொகுசாக இருப்பதற்கும் ,விரைவாக பயணிப்பதற்குமெ பைக் ,கார் போன்றவை ...
பைக் ,காரில் செல்வதால் நம் உடலின் நலமும் ,பலமும் குறைகிறது அது மட்டுமா நம் அன்னை பூமியும் மாசு பெறுகிறது

எல்லா தருணத்திலும் நமக்கு அவசரமாக பயணிக்க அவசியம் ஏற்படுவதில்லை ...அப்புறமும் ஏன் நாம் காலத்தை துரத்தி ஓடுகிறோம் ??/

இனிமேலாவது யோசிப்போம் ...20கிலோ மீட்டருக்கு உள்ளே பயணம் செய்வதானால் சைக்கிளில் செல்வோம் .முடியாதவர்கள் பொது வாகனத்தில் செல்வோம்

எல்லாவற்றையும் அரசாங்கம் செய்யும் என உறங்கக் கூடாது , நாம் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை ..எனவே நாமும் ஏதேனும் மாற்றத்தை உருவாக்குவோம்..இனி சைக்கிளில் செல்வோம் சுத்தமான பூமியை நம் குழந்தைகளின் கையில் ஒப்படைப்போம் ...



6 comments:

  1. கண்டிப்பா...சைக்கிள் புரட்சிக்கு வித்திடுவோம்...

    ReplyDelete
  2. ம் இங்கு வேலைக்கு நானும் சைக்கிள்தான் பாவிக்கிறேன்.:-)

    ReplyDelete
  3. நான் சுமார் 43 ஆண்டுகளாக சைக்கிளை உபயோகிக்கிறேன். சென்னையில் 30 அல்லது 35 ஆண்டுகள் முன் வரை மவுண்ட்ரோடு போன்ற பெரிய சாலைகளில் சைக்கிள் செல்ல சாலையின் இடது ஓரம் தனி வழியே அமைத்துக்கொடுத்திருந்தனர். இன்று டூவீலரில் சென்றால்தான் மதிக்கின்றனர். சைக்கிள் ஸ்டாண்டுகளில் திறந்தவெளியில் மட்டும் நிறுத்த அனுமதிக்கின்றனர்.
    டூவீலர் அதிகம் பயன்பாட்டுக்கு வந்தபின் இளைஞர்கள் சாலை விபத்தில் இறப்பது அதிகரித்துள்ளது.
    மேலும் சைக்கிள் ஓட்டுதல் மிகச்சிறந்த உடற்பயிற்சி. நான் இந்த வயதில் (66) ஆரோக்கியமாக இருப்பதற்கு என்னுடைய சைக்கிள் மீதான காதலே.

    ReplyDelete
  4. 20 - 30 கி.மீ ஓட்டுபவர்கள் கூட E-bike-ஐ பயன்படுத்தலாம்...மாசு குறையும்...
    அரசே அதை அறிவுறுத்தலாம்...முடிந்தால் ஓரளவு மானியம் கூட வழங்கலாம்...

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை...
    நம் நாட்டிற்கு மிகவம் தேவை...
    நன்றி... வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
  6. போலி சாமியார்கள் – கோரக்கர்
    துறவியப்போல் வேடம் இட்டு காம இச்சைக் கொண்டு அலைவார்களாம். யந்திர தகடுகளை பரப்பி மேலிட்டு தபசியை போல் பாசாங்கு செய்வார்களாம். எப்போதும் பெண்கள் பக்கம் பார்த்து பெண்னாசை பிடித்து அலைவார்களாம்,அவர்களை பேயர்கள் என்கிறார். பூரணம் என்றால் என்ன என்று கேட்டால் வாயில் வந்தபடியெல்லாம் பேசி மக்களை ஏமாற்றி மயக்கிடுவார்களாம்.
    இவ்வாறு கோரக்கர் பல்லாயிரம் அண்டுகளுக்கு முன்னரே போலி சாமியார்களை பற்றி கூறிவிட்டார்
    http://www.tamilkadal.com/?p=1144

    ReplyDelete

நான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்