Monday, April 30, 2012

ஆண்மை என்பது ஆணுக்கு மட்டும் அல்ல

"ஆண்மை தவறேல்!" என்பது ஆணுக்கு மட்டுமே உரிய வாக்கியம் அல்ல.ஆண்மை என்றால் ஆண் என்று மட்டுமே அர்த்தம் அல்ல . ஆண்மை என்றால் வீரம்,நேர்மைக்கு துணைபோகும் மாவீரம் தான் ஆண்மை

ஆண்மை என்பது குணம் தான் ,அது ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு.எனவே பாலினம் கருதி ஆண்மை என்ற சொல்லை பயன்படுத்தாதீர்

ஆண்மை என்பது விந்தணுவின் வீரியமோ,நீடித்து நிற்கும் திறமையோ அல்ல , அது அற்பமாக காசு சம்பாதிக்க எண்ணியவர்களின் அப்பட்டமான பொய்
ஆண்மை என்பது கருணையையும்,கோபத்தையும் சமநிலைப்படுத்தி பார்க்கும் திறனே !

ஒரு பெண்ணை நால்வர் பாலத்காரம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் .ஒரு கடந்து போகும் ஆண் அதை பார்த்துவிட்டு தட்டிக்கேட்காமல்  போனால் அவன் ஆண்மை நிறைந்தவன் அல்ல.அதே நேரத்தில் மனதளவில் அந்த நால்வரை எதிர்க்கும் பெண் ஆண்மை நிறைந்தவள்.வீரப்பெண்மணி ,கற்பு நிறைந்தவள் (கற்பு என்பது உடலில் அல்ல மனதில் இருக்கிறது .இன்னொரு சமயம் இதை விரிவாக பார்ப்போம் )

சமூகத்தில் நடக்கும் அட்டுழியங்களை நீ கண்மூடி பார்த்துக்கொண்டு இருந்தாயானால் நீ ஆண்மை நிறைந்தவன் அல்ல ..

ஆணாக பிறந்த எல்லோரும் ஆண்மை நிறைந்தவரும் இல்லை , பெண்ணாக பிறந்த எல்லோரும் ஆண்மை அற்றவரும் இல்லை ...
ஆண்மை தவறேல் !!

2 comments:

  1. ஆண்மைக்கு சரியான ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மை விளக்கம் தந்த ஆண்மகனே. தொடரட்டும் உங்கள் உங்கள் வீரிய வரிகள்; சீரிய கவிதைகள்.

    ReplyDelete

நான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்