Monday, June 25, 2012

கழிவறை பதிவு

இந்தியாவில் 50 சதவிகித மக்கள் கழிவறையை பயன்படுத்துவதில்லை என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல்.உலகிலே சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடம் கழிவறை தான் ,சகல நோய்களின் பிறப்பிடம் அது தானே ..

நம் வீட்டு கழிவறையை பரவலாக சுத்தமாக வைத்துக்கொள்வோம் . சில சோம்பேறிகள் அதை கழுவ கூட பணியாளர் வைத்திருப்பர்.அது ஒரு புறம் இருக்க பொது கழிவறைக்குள் நம்மால் நுழைய கூட முடியாத பரிதாப நிலை தான் உள்ளது

கேவலமான கழிவறை 

ஓட்டை கதவுகள் 

பாசனம் பிடித்த குழாய்கள் 

தண்ணியே வராத கை கழுவுமிடம் 

புறத்தோற்றம் 
நீங்கள் மேற்கண்ட புகைப்படங்கள் எல்லாம் மதுரை பெரியார் நிலையத்தில் உள்ள  நவீன(?) கழிவறையில் எடுத்தது (நானே தண்ணி ஊத்திட்டு தான் எடுத்துருக்கேன் )

மலம் கழிக்க  நான்கு ரூபாயும் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாயும் வக்கனையாக  வாங்கும் அவர்கள் அதை பராமரிப்பதே இல்லை அவர்கள் மட்டுமல்ல  நிறைய இடத்தில் இதே அவல நிலை தான் 

இன்னும் ஒரு ஆண்டுக்குள் அந்த கழிவறையின் Service Tank உடைந்து போகும் நிலைமையில்  நீர் வடிந்து கொண்டு இருக்கிறது 

இது போன்ற  பொது கழிவறைகளை பயன்படுத்தும் மக்களும் அதை ஒழுங்காக  பயன்படுத்துவதே இல்லை

அரசும் இதை கண்டு கொள்ளாது ,நாமும் மூக்கை பொத்திக்கொண்டு போய் விடுவோம் பிறகென்ன தேவதூதரா வந்து நம் கழிவறைகளை சுத்தம் செய்வார் ??

மனிதன் சாக்கடையில் "பீ" அள்ளும் அவலம் இன்றும் தொடரத்தானே செய்கிறது .மதுரை போன்ற பெருநகரத்திலே (?!) இது போன்ற நிலைமை என்றால் கிராமப்புறங்களில் இருக்கும் கழிவறைகளின் நிலைமை ??

ரயிலில் உள்ள கழிவறை பற்றி தனி பதிவே எழுதலாம் அந்த அளவு மோசம் .

மலம் , சிறுநீர் கழித்த பின்பு எத்தனை பேர் சோப்பு போட்டு கை கழுவுகிறீர்கள்?கையை கழுவும் பழக்கமாவது இருக்கிறதா ??

"சுத்தம் சோறு போடும் " ,"சுத்தம் தெய்வத்திற்கு சமம் " சொல்பவர்களே நம் கழிவறையில் சாத்தான் கூட வந்து இருக்காது 

#ரோட்ல ஒன்னுக்கு போற நமக்கு எதுக்கு பாஸ் இதெல்லாம் என எவனாவது கேட்டால் அவனை செருப்பால் அடி 

UPDATE : தற்போது மேல் குறிப்பிட்ட கழிப்பறையில்  பராமரிப்பு பணி நடந்து வருகிறது

Saturday, June 16, 2012

குடியரசுத்தலைவர் நமக்கு தேவைதானா ?

பன்னிரெண்டு குடியரசுத் தலைவர்களை பார்த்து விட்ட நாம் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் யார் என்று எதிர் பார்க்கும் சூழ்நிலையில் (99.99% சதவிகிதம் பிரணாப்முகர்ஜி தான் அது ) எனக்கு ஒரு கேள்வி எழுகிறது ..இந்தியாவிற்கு குடியரசுத் தலைவர் என்ற ஒருவர் தேவை தானா ?

நம் நாட்டை பொறுத்தவரை ஒரு சில அதிகாரம் தவிர எல்லா ஆட்சி,அதிகாரமும் பிரதமர் கையிலே இருக்கிறது என்பது சாமானிய இந்தியனுக்கும் தெரியும் ..அதனால் தான் மீடியா கூட ஜனாதிபதி பற்றி தினமும் செய்தி வெளியிடுவதில்லை (அப்துல் கலாம் இருந்த காலம் தவிர்த்து )

சரி நம் நாட்டின் குடியரசுத் தலைவரின் அதிகாரம் தான் என்ன ?

  • இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க (இந்தியப் பிரதமராக பதவியேற்க) அழைப்பது.
  • அவரை பிரதம மந்திரியாக நியமித்தல்
  • பிரதம மந்திரியின் பரிந்துரைப்படி மற்ற மத்திய அமைச்சர்களை நியமித்தல்
  • தானே நாட்டை நிர்வகிக்காமல் அமைச்சரவை மூலமாக நிர்வகித்தல்(இதனால் அலங்காரத் தலைவர் எனப்பட்டார்)
  • பாராளுமன்றத்தைக் கூட்டுதல், தள்ளிவைத்தல், அதில் உரையாற்றுதல், பாராளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கையெழுத்திடல் (பிறகே அது சட்டமாகும்)
  • இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி.
கீழ்க்கண்ட பதவிகளுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.
  • மாநில ஆளுநர்.
  • உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
  • இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.
  • இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள்.
  • வெளி நாட்டுத் தூதுவர்கள்
மேலும் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ய(பிரிவு-352), பாராளுமன்றத்தின் கீழவையைக் கலைக்க, தேர்தல் நடத்த, அவசர ஆணைகள் பிறப்பிக்க, மாநில அரசைக்கலைக்க(பிரிவு-356), உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு.(நன்றி : விக்கிபிடியா)

அதே போல் குடியரசுத் தலைவர் என்பவர் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படாமல் மக்கள் பிரதிநிதிகளால் சதவிகித வாக்கு முறையில் தேர்ந்து எடுக்கப்படுகிறார் இது பற்றி மேலும் விவரம் காண சொடுக்கவும் 

நம் நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு குழப்பமான நடைமுறைகள் என்று புரியவில்லை ??
பிரதமர் தான் எல்லாம் என்று எல்லாருக்கும் தெரியும் இருந்தாலும் இந்தியாவின் முதல் குடிமகன் என்று நாம் சொல்லிக்கொள்ள நமக்கு ஒருவர் வேண்டும் 
குடியரசுத் தலைவருக்கும் சில அதிகாரங்கள் உள்ளது இருப்பினும் ஆளுங்கட்சி ஆதரவில் வந்த யாரும் அந்த அதிகாரங்களை உபயோக படுத்துவதில்லை 
(வீட்டோவை கூட யாரும் ஒழுங்காக பயன்படுத்தவில்லை )

சரி முடிவாக கேட்கிறேன் ஒரு நாட்டை ஆள ஏன் இருவர் ? அதுவும் ஒருவர் சும்மா பதவி என்ற மகுடம் மட்டும் உள்ள அலங்கார தலைவர் 
இருப்பினும் குடியரசு தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு,பயண செலவு,என்று கோடி கணக்கில் மக்களின் வரி பணத்தை செலவு செய்கிறோம் 

மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத எந்த தலைவரும் நமக்கு தேவை இல்லை என்னைக்கேட்டால் இந்தியாவிற்கு பிரதமர் ஒருவரே போதும்

இல்லை இந்தியாவிற்கு நிச்சயம் குடியரசுத்தலைவர் தேவை என்று கருதினால் குறைந்தபட்சம் அவரை மக்களாகிய நாங்கள் தேர்ந்து எடுக்கும் படி வழி செய்யக்கூடாதா???

பதிவிற்கு கொஞ்சம் சம்பந்தமான கொசுறு கொஞ்சம் ........

#இன்றைய தேதியில் மக்கள் எல்லோரும் கலாம் குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறார்கள் ஆனால் காங்கிரஸ் வேறு நினைக்கிறது 

#இதற்கு நடுவில் கலைஞர் ஒரு பேட்டியில் "கலாம்" என்றால் தமிழில் "கலகம்" என்று கூறியுள்ளார் ..தலைவா "கலாம்" என்று தமிழில் சொல்லே கிடையாதே அது அரேபிய சொல் .."கலாம்" என்பது இந்தியர்களின் நெஞ்சில் குடியிருக்கும் சொல் 

#இந்திய சட்டதிட்டதை நானும் மதிக்கிறேன் இருந்தாலும் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்ற ஒரு அற்ப ஆசையில் தான் இந்த பதிவு எழுதியுள்ளேன் ..

Thursday, June 14, 2012

நித்யானந்தா என்ற கேலிக்கூத்து

*இது வரை நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை இருப்பினும் காலத்தின் கட்டாயம் கருதி இந்த பதிவை எழுதுகிறேன் *

முதலில் சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

*கடவுள் மனித உருவில் அவதரிக்க மாட்டார்
*யோகா என்பது குரு சிஷ்ய முறையில் மட்டுமே கற்றுக்கொடுக்க முடியும்
*யோகிகள் யாரும் தற்பெருமையோ,விளம்பரமோ தேடுவதில்லை
*நித்யானந்தா ஒன்றும் யோகி இல்லை

இப்போது பேசலாம்,
தன்னை விஷ்ணு,சிவன் இவர்களின் அவதாரம் என்று அறிவுத்துக்கொண்டு யோகா வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த நித்யானந்தா குமுதம் இதழில் சரளகம்சம்,முக்தி என்று பல்வேறு கோணத்தில் எழுத ஆரம்பித்தார் ...நம் மக்களை பற்றி தான் நல்லாவே தெரியுமே வேப்பமரத்தில் பால் வடிந்தாலே அது தெய்வத்தின் செயல் என்று நம்பும் மூடர்கள்..நித்யானந்தாவும் இதான் சாக்கு என்று கதை கதையாய் அளந்து விட்டார் ..நம் மக்களும்..ஆகா ஒளி வந்து விட்டது என் வாழ்வில் வழி வந்து விட்டது என்று நித்யானந்தா மடத்திற்கு பணத்தை வாரி இறைத்தனர்..ஆயிரம் கோடி அளவில் அவர் சொத்து சேர்க்க ஆரம்பித்தார் ..போர போக்கில் இரண்டு பள்ளி நான்கு மருத்துவமனைகள் திறந்து நான் பொது சேவை செய்யவே பிறந்துள்ளேன் என்றும் தன்னை விளம்பர படுத்திக்கொண்டார்

இங்கே உங்களுக்கு நான் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும் ..நித்யானந்தா எழுதிய ,பேசிய விஷயங்கள் எல்லாமே ஏற்கனவே ஓஷோ என்பவர் பேசிவிட்டார் ..அவரோட பேச்சுக்கள் ,பகவத் கீதையின் சில பக்கங்கள் என்பதே நித்யானந்தா என்ற முட்டாளை மக்களிடம் அறிவாளியாக காட்டியது ..சாதாரண மக்கள் மட்டுமல்ல கடைந்து எடுத்த அறிவாளி பட்டாளமும் அவர் பின்னால் சென்றது தனிக்கூத்து

பிறகு ரஞ்சிதா என்னும் சினிமா நடிகையோடு நித்யானந்தா உல்லாசமாக இருந்தார் என்று சன் டிவியில் ஒரு நாள் முழுக்க அந்த நீல படம் ஓடிய பிறகே பாதி மக்கள் கழன்று கொண்டனர் ..

கொஞ்ச நாளில் அந்த வழக்கும் ரஞ்சிதாவின் அந்தர் பல்டியால் நீர்த்துப் போனது ..அப்புறம் மதுரையின் இளைய ஆதீனம் என்ற பட்டம் சூட்ட பட்டவுடன் மக்களுக்கு இன்னொரு முறை "டைம் பாஸ்" ஆனது

தற்போது பத்திரிக்கைகாரர்களை அடித்தார் , பாலியல் குற்ற சாட்டு என வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆளு காணாமல் போய் பிறகு அவரே பெங்களூர் கோர்டில் சரணடைந்து கோர்ட் காவலில் வைக்கப்பட்டு ஒரே நாளில்  ஜாமீனில் வந்துள்ளார்

நம் மக்களிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் சில
*நித்யானந்தா உங்களை ஏமாற்றினாரா இல்லை நீங்களாக போய் தானே ஏமாந்தீர்கள் ?
*ஏன் இந்த காலத்திலும் அற்ப வித்தைகளை நம்பி எமாறுகீர்கள் ?
*கடவுள் மனிதனாய் பிறக்க முடியும் என்றால் முதல் கடவுள் நீங்கள் தான் என்று ஏன் புரிந்துகொள்ள மறுக்குறீர்கள்
*நித்யானந்தா மட்டுமல்ல ஏற்கனவே பல போலி சாமியார்கள் வந்தும் ஏன் முட்டாளாகவே வாழ ஆசைப்படுகிறீர்கள் ?


#நித்யானந்தா மட்டுமல்ல எல்லா சாமியார்களும் போலியே 








Sunday, June 10, 2012

கேலிசித்திரம் : இருவேறு பார்வை

சமீபத்தில் CBSE  பாட புத்தகத்தில் வந்த இரு வேறு கார்டூன்களை நம் அரசியல் தலைவர்கள் எதிர்த்து உள்ளனர்
பிரச்சனைக்குரிய இரண்டு கேலிசித்திரங்கள்



முதல் படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சை படுத்துவதாக இருக்கிறதாம் ..அதுவும் தமிழர்களை மட்டுமே குறிக்கிறது என்று நம் அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர் 
இரண்டாவது சட்டமேதை அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் உருவாகும் நிலை ஆமை போல் உள்ளது என்பதை குறிக்கும் கேலிசித்திரம் ..இது அம்பேத்கரை கொச்சை படுத்தும் படம் என்று நம் அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர் 

பார்வை 1 : கேலிசித்திரம் வரைய கூட உரிமை இல்லையா ?

தினமும் செய்தித்தாளில் ஆயிரம் கேலிசித்திரங்கள் வந்து கொண்டிருக்கும் போது இதை பாடப்புத்தகத்தில் வைத்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்ப்பதில் என்ன நியாயம் ?
எப்படி இருந்தாலும் ஒரு மாணவன் ஆயிரம் கேலிசித்திரங்களை பார்க்கத் தான் போகிறான் ..அவனுக்கு நம் நாட்டின் நிலைமை தெரியாமல் இருக்கப்போகிறதா என்ன ?
வரலாறு உங்கள் போக்கிற்கு இல்லை என்றால் மாற்ற சொல்லுவீர்களா ?
இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக கிளப்பி நாடாளுமன்றத்தை ஒடுக்க வேண்டுமா என்ன ? கபில்சிபில் இடம் எடுத்து சொல்லியிருந்தாலே போதுமே

இது போன்ற கேலிச்சித்திரங்கள் மனிதர்களை புண்படுத்தும் நோக்கில் வரையப்படுவதில்லை அவர்கள் தம் தவறை நகைச்சுவையாக சுட்டிக்காட்டவே ஓவியர்கள் வரைகின்றன்ர் என்பது அரசியல் தலைவர்களுக்கு தெரியாதா என்ன ?

இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம் அதுவும் அந்த இரண்டு கேலிசித்திரங்களும் 1950களை சேர்ந்தவை.இதை தடை செய்வது என்பது செத்தவனை தோண்டி எடுத்து திட்டுவது போல் உள்ளது 

பார்வை 2 : 
பாட புத்தகத்தில் எதற்கு கேலி சித்திரம் சேர்க்க வேண்டும் ?
நகைச்சுவை என்பது மற்றவரை புண்படுத்தாமல் இருக்குமா என்பதை பாட புத்தகத்தை எழுதியவர்கள் யோசிக்காமல் செயல்பட்டனரா?


முடிவு உங்கள் கையில் நண்பர்களே 

கார்டூன் என்பது சிரிக்கும் சிந்தனையாக எடுத்துக்கொள்ளப் போகிறீர்களா?
இல்லை 
நேற்று வந்த கார்டூன் என்னைப் போலவே உள்ளது என்று நீங்களும் போராடப் போகிறீர்களா? 


Friday, June 8, 2012

அகிம்சை என்பதே பொய்


உங்களில் யாராவது சாகும் வரை அகிம்சையை கடைபிடித்து விட முடியுமா ? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டிக் கொண்டா இருப்பீர்கள் ?

அகிம்சை என்று நமக்கு போதித்து போதித்தே எல்லா பிரச்சனையையும் சகித்துக் கொள்கிறோம் .குப்பை கூடத்தில் உட்கார்ந்து துர்நாற்றத்தை சகித்துக் கொள்வதை விட குப்பையை சுத்தம் செய்வது தானே புத்திசாலித்தனம்

ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள் அகிம்சை என்று நமக்கு சொல்லிக் கொடுத்தவர்களால் தான் மிகப்பெரிய கலவரமே நடந்தேறியிருக்கிறது
நாம் அகிம்சையை புரிந்து கொள்ளவேயில்லை.

ஒருவன் அடித்தால் , அடக்குமுறையை ஏவினால் ,ஏகாப்தியம் செய்தால் வாயை பொத்திக்கொண்டு,வீட்டில் உட்கார்ந்து இருப்பதும்,சாம்பார் சாதம் சாப்பிடுவதையுமே அகிம்சை என்று கருதுகின்றனர் பலர்

ஒருவன் உன்னை அடித்தால் கோபம் வருவது இயல்பு தானே .அவனிடம் அடங்கி போனால் “வலிமையானவன் ஆழ்வான்” என்பதைத் தானே நீ ஏற்றுக்கொள்கிறாய்

உன் உரிமைகளை பெற ஒரு நாளும் போராட மாட்டாயா?? அகிம்சை என்பதை தப்பாக புரிந்து கொண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தாயானால் நீ செத்த பிறகும் கூட உனக்கு நியாயம் கிடைக்காது !
அகிம்சை என்பதே பொய் !! ஏனென்றால் மனித மனத்தின் கோபத்தை ஏமாற்றி பூசிமொழுகி உன்னை ஆட்சி செய்ய பயன்படுத்தும் சொல்லே அகிம்சை

அகிம்சை நம்மை புரிந்து கொள்ளாது நாமும் அகிம்சையை புரிந்து கொள்ளப் போவதில்லை.எனவே அகிம்சை என்று வாய் கிழிய கத்துவதை(?!) விட சுற்றத்தார் அனைவர் மீதும் அகந்தையற்ற அன்பு செலுத்துங்கள் போதும் !
#அன்பை போன்றதோர் போர் தான் உலகில் அதிகம் காயம் தரும்