Saturday, July 7, 2012

மதசார்பின்மை என் பார்வையில்

இந்தியா ஒரு மதசார்பின்மை நாடு என்பது எல்லோருக்கும் தெரியும் .சரி மதசார்பின்மை என்றால் என்ன ?
மைனாரிட்டி மதங்களுக்கு துதி பாடுவதா?இல்லை மெஜாரிட்டி மதங்களை இழிவு படுத்துவதா?.
பலர் மேற்கூறிய ஏதேனும் ஒன்றை செய்து விட்டு " I AM A SECULARIST" என்று கூறிக்கொள்கிறார்கள்

ஒவ்வொரு தனி மனிதன் மனதிலும் "கடவுள் யார் ? " என்ற தேடல் இருக்கத்தான் செய்கிறது !.அது "நான் யார் ? " என்ற கேள்வியின் தேடலாகவும் இருக்கலாம் .மனிதன் தன் தற்காலிக பதிலாக மதத்தை பயன்படுத்திக் கொள்கிறான்

ஹிந்து,முஸ்லிம்,கிருஸ்த்துவன்,சீக் என் பல மதங்கள் நம் நாட்டில் உள்ளன ..எல்லாமே நமது அடையாள அட்டை போல் நம்முடனே ஒட்டிக்கொண்டு இருப்பது துரதிஷ்டவசமே

இதில் மாபெரும் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நாத்திகர்கள் ?! ஆம் நிறைய நாத்திகர்கள்  , தான் கடவுளை நம்பவில்லை என்பதை தாண்டி கடவுளை நம்பும் எல்லோரையும் திட்டுவதையே மதசார்பின்மை என்று நினைத்துக்கொண்டு வாழ்கின்றனர்

எல்லா கடவுளையும் வணங்கினால் மதசார்பின்மையா? என்றால் அதுவும் இல்லை .ஏன்னென்றால் வெளியில் வேண்டுமானால் அவர்கள் நடிக்கலாம் உள்ளுக்குள் உறுத்தும் பாம்பாக தத்தம் மத அடையாளம் சுமக்கத்தான் செய்கிறார்கள்

என்னைப் பொறுத்த வரை மதசார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பதே ஆகும் .அதவாது யார் மதத்தையும் இழிவு படுத்தாமல் உன் பிறப்பு மதமே என்றாலும் அதை போற்றாமல் ,மத அடையாளம் துறந்து வாழ்தலே ஆகும்

நீங்கள் கடவுளை நம்புங்கள் நம்பாமல் இருங்கள் ஆனால் அவரின் பெயரால் ஏன் சண்டை போட்டு கொ(ல்)ள்கிறீர்கள் ???
சந்தோஷமாக வாழ எந்த மத கடவுளும்  தேவை இல்லை சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் பண்பு இருந்தாலே போதும்


5 comments:

  1. இந்தியா மதச் சார்பின்மை நாடா ? அப்படி தெரியவில்லை. அனைத்து மதங்களையும் சார்ந்து இருக்கும் நாடு .. சொல்லப் போனால் மதங்களையே சார்ந்து வாக்கு வங்கி அரசியல் நடத்தும் நாடு .. ஏனெனில் மக்கள் தொகை கணிப்பில் நாத்திகர்களுக்கு தனிக் காலம் ஒன்றைக் கொடுக்காத நாடு ???

    சகோ. ஒரு சிறியத் திருத்தம்.. ஆத்திகர்கள் கடவுளை நம்புபவர்கள்.. நாத்திகர்கள் என்று வந்திருக்க வேண்டும் ... !!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கூறியது சரியே சகோ ..தவறை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி சகோ..பிழை திருத்தப்பட்டு விட்டது நன்றி

      Delete
  2. அன்பே அனைத்தும் - வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete
  3. Good.

    //மைனாரிட்டி மதங்களுக்கு துதி பாடுவதா?இல்லை மெஜாரிட்டி மதங்களை இழிவு படுத்துவதா?.
    பலர் மேற்கூறிய ஏதேனும் ஒன்றை செய்து விட்டு " I AM A SECULARIST" என்று கூறிக்கொள்கிறார்கள்//

    Exactly my thoughts.

    ReplyDelete
  4. மு.நாட்ராயன்July 15, 2012 at 12:48 AM

    அற்புதமான விளக்கம். மதசார்பற்ற நாடு என்ற போர்வையில் இந்து அல்லாதவர்களை துதித்தும் இந்துக்களை தனிமை படுத்தியும் வருகிறார்கள் இந்த அரசியல் வாதிகள்.இது எல்லாம் ஓட்டு வங்கி அரசியலுக்குத்தான்.அரசியல் என்ன சொன்னாலும் இவர்கள் கேட்பதில்லை. கோர்ட்டு உத்தரவு போட்டும் பயன் இல்லைதான். என்ன செய்வது.
    " இப்படி செய்பவர்களை அரசியலை விட்டு ஒதுக்க வேண்டும்". யார் செய்வது? அதிகாரம் இவர்கள் கையில்தானே இருக்கிறது. மக்கள் விழிப்படைய வேண்டும். குறிப்பாக இந்துக்கள்!

    ReplyDelete

நான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்