Monday, July 23, 2012

சைக்கிள் புரட்சி


நாட்டில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது . அண்டார்டிக் கண்டம் புவி வெப்பமடைவதால் உருகி கொண்டு இருக்கிறது.கடல் மட்டம் உயர்கிறது, புவியின் சராசரி வெப்பமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது

இதற்கெல்லாம் யார் காரணம் ?..நாம் தானே ..இன்று மிதிவண்டி இல்லாத வீடு கூட இருக்கிறது , பைக் இல்லாத நடுத்தர வீட்டை பார்க்கவே முடியவில்லை.அருகில் இருக்கும் கடைக்கு போக கூட பைக் பயன்பாடு அதிகரித்து உள்ளது

அது மட்டுமா ?? இன்று பல இளைஞர்கள் வீடு கட்டுவதையும் தாண்டி .. தனக்கென ஒரு கார் வாங்குவதையே வாழ்க்கையில் SETTLEஆவது என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்

சாலையில் காற்று கூட புக முடியாத அளவுக்கு வாகனங்கள் நெருக்கிக் கொண்டு செல்கிறது ..ஊரெல்லாம் மாசு ..சுவாசிக்கும் காற்றில் மாசு...குடிக்கும் தண்ணீரில் மாசு...நாசித்துவாரங்களில் எந்நேரமும்  படிக்கிறது தூசு

இதற்கு தீர்வு என்ன ???..

சைக்கிள்

உங்களுக்கு இதைக் கேட்டால் சிரிப்பு வரும் ஆனால் பதில் சைக்கிள் தான்

சற்று ஆழ்ந்து யோசித்தால் 60% மக்கள் தினமும் இருபது கிலோ மீட்டர்கு மேல் பயணம் செய்வதில்லை.நாம் ஏன் அந்த பயணத்தை சைக்கிளில் செய்யக்கூடாது ??

யோசித்துப்பாருங்கள் ...நாம் சொகுசாக இருப்பதற்கும் ,விரைவாக பயணிப்பதற்குமெ பைக் ,கார் போன்றவை ...
பைக் ,காரில் செல்வதால் நம் உடலின் நலமும் ,பலமும் குறைகிறது அது மட்டுமா நம் அன்னை பூமியும் மாசு பெறுகிறது

எல்லா தருணத்திலும் நமக்கு அவசரமாக பயணிக்க அவசியம் ஏற்படுவதில்லை ...அப்புறமும் ஏன் நாம் காலத்தை துரத்தி ஓடுகிறோம் ??/

இனிமேலாவது யோசிப்போம் ...20கிலோ மீட்டருக்கு உள்ளே பயணம் செய்வதானால் சைக்கிளில் செல்வோம் .முடியாதவர்கள் பொது வாகனத்தில் செல்வோம்

எல்லாவற்றையும் அரசாங்கம் செய்யும் என உறங்கக் கூடாது , நாம் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை ..எனவே நாமும் ஏதேனும் மாற்றத்தை உருவாக்குவோம்..இனி சைக்கிளில் செல்வோம் சுத்தமான பூமியை நம் குழந்தைகளின் கையில் ஒப்படைப்போம் ...



Saturday, July 7, 2012

மதசார்பின்மை என் பார்வையில்

இந்தியா ஒரு மதசார்பின்மை நாடு என்பது எல்லோருக்கும் தெரியும் .சரி மதசார்பின்மை என்றால் என்ன ?
மைனாரிட்டி மதங்களுக்கு துதி பாடுவதா?இல்லை மெஜாரிட்டி மதங்களை இழிவு படுத்துவதா?.
பலர் மேற்கூறிய ஏதேனும் ஒன்றை செய்து விட்டு " I AM A SECULARIST" என்று கூறிக்கொள்கிறார்கள்

ஒவ்வொரு தனி மனிதன் மனதிலும் "கடவுள் யார் ? " என்ற தேடல் இருக்கத்தான் செய்கிறது !.அது "நான் யார் ? " என்ற கேள்வியின் தேடலாகவும் இருக்கலாம் .மனிதன் தன் தற்காலிக பதிலாக மதத்தை பயன்படுத்திக் கொள்கிறான்

ஹிந்து,முஸ்லிம்,கிருஸ்த்துவன்,சீக் என் பல மதங்கள் நம் நாட்டில் உள்ளன ..எல்லாமே நமது அடையாள அட்டை போல் நம்முடனே ஒட்டிக்கொண்டு இருப்பது துரதிஷ்டவசமே

இதில் மாபெரும் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நாத்திகர்கள் ?! ஆம் நிறைய நாத்திகர்கள்  , தான் கடவுளை நம்பவில்லை என்பதை தாண்டி கடவுளை நம்பும் எல்லோரையும் திட்டுவதையே மதசார்பின்மை என்று நினைத்துக்கொண்டு வாழ்கின்றனர்

எல்லா கடவுளையும் வணங்கினால் மதசார்பின்மையா? என்றால் அதுவும் இல்லை .ஏன்னென்றால் வெளியில் வேண்டுமானால் அவர்கள் நடிக்கலாம் உள்ளுக்குள் உறுத்தும் பாம்பாக தத்தம் மத அடையாளம் சுமக்கத்தான் செய்கிறார்கள்

என்னைப் பொறுத்த வரை மதசார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பதே ஆகும் .அதவாது யார் மதத்தையும் இழிவு படுத்தாமல் உன் பிறப்பு மதமே என்றாலும் அதை போற்றாமல் ,மத அடையாளம் துறந்து வாழ்தலே ஆகும்

நீங்கள் கடவுளை நம்புங்கள் நம்பாமல் இருங்கள் ஆனால் அவரின் பெயரால் ஏன் சண்டை போட்டு கொ(ல்)ள்கிறீர்கள் ???
சந்தோஷமாக வாழ எந்த மத கடவுளும்  தேவை இல்லை சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் பண்பு இருந்தாலே போதும்