Sunday, June 10, 2012

கேலிசித்திரம் : இருவேறு பார்வை

சமீபத்தில் CBSE  பாட புத்தகத்தில் வந்த இரு வேறு கார்டூன்களை நம் அரசியல் தலைவர்கள் எதிர்த்து உள்ளனர்
பிரச்சனைக்குரிய இரண்டு கேலிசித்திரங்கள்



முதல் படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சை படுத்துவதாக இருக்கிறதாம் ..அதுவும் தமிழர்களை மட்டுமே குறிக்கிறது என்று நம் அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர் 
இரண்டாவது சட்டமேதை அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் உருவாகும் நிலை ஆமை போல் உள்ளது என்பதை குறிக்கும் கேலிசித்திரம் ..இது அம்பேத்கரை கொச்சை படுத்தும் படம் என்று நம் அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர் 

பார்வை 1 : கேலிசித்திரம் வரைய கூட உரிமை இல்லையா ?

தினமும் செய்தித்தாளில் ஆயிரம் கேலிசித்திரங்கள் வந்து கொண்டிருக்கும் போது இதை பாடப்புத்தகத்தில் வைத்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்ப்பதில் என்ன நியாயம் ?
எப்படி இருந்தாலும் ஒரு மாணவன் ஆயிரம் கேலிசித்திரங்களை பார்க்கத் தான் போகிறான் ..அவனுக்கு நம் நாட்டின் நிலைமை தெரியாமல் இருக்கப்போகிறதா என்ன ?
வரலாறு உங்கள் போக்கிற்கு இல்லை என்றால் மாற்ற சொல்லுவீர்களா ?
இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக கிளப்பி நாடாளுமன்றத்தை ஒடுக்க வேண்டுமா என்ன ? கபில்சிபில் இடம் எடுத்து சொல்லியிருந்தாலே போதுமே

இது போன்ற கேலிச்சித்திரங்கள் மனிதர்களை புண்படுத்தும் நோக்கில் வரையப்படுவதில்லை அவர்கள் தம் தவறை நகைச்சுவையாக சுட்டிக்காட்டவே ஓவியர்கள் வரைகின்றன்ர் என்பது அரசியல் தலைவர்களுக்கு தெரியாதா என்ன ?

இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம் அதுவும் அந்த இரண்டு கேலிசித்திரங்களும் 1950களை சேர்ந்தவை.இதை தடை செய்வது என்பது செத்தவனை தோண்டி எடுத்து திட்டுவது போல் உள்ளது 

பார்வை 2 : 
பாட புத்தகத்தில் எதற்கு கேலி சித்திரம் சேர்க்க வேண்டும் ?
நகைச்சுவை என்பது மற்றவரை புண்படுத்தாமல் இருக்குமா என்பதை பாட புத்தகத்தை எழுதியவர்கள் யோசிக்காமல் செயல்பட்டனரா?


முடிவு உங்கள் கையில் நண்பர்களே 

கார்டூன் என்பது சிரிக்கும் சிந்தனையாக எடுத்துக்கொள்ளப் போகிறீர்களா?
இல்லை 
நேற்று வந்த கார்டூன் என்னைப் போலவே உள்ளது என்று நீங்களும் போராடப் போகிறீர்களா? 


4 comments:

  1. //நகைச்சுவை என்பது மற்றவரை புண்படுத்தாமல் இருக்குமா என்பதை பாட புத்தகத்தை எழுதியவர்கள் யோசிக்காமல் செயல்பட்டனரா?//

    This is my view.

    ReplyDelete
  2. Hindi first supported by e.v.r.,he started Hindi class in his house.in this cartoon shows the success of student strike.in tamilnadu only not teaching in school.so they are telling this.guilty concept.

    ReplyDelete
  3. இந்தியை எதிர்த்த திராவிடக்கட்சிகள் தமினுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. வேலை வாய்ப்பைக் கெடுத்தார்கள். தற்போதைய இளைய தலைமுறைக்கு இந்தியும் தெரியாது ஆங்கிலமும் சரிவர பேசத்தெரியாது. இதனால் பயன்பெறுபவர்கள் வடமாநிலத்தவரும் ஆந்திரர்களுமே. சென்னை காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரிய கம்பெனிகளில் அவர்கள் ஆதிக்கமே உள்ளது.
    கார்ட்டுன் சரியாகத்தான் போடப்பட்டுள்ளது.
    இந்தி வேண்டாம் என்ற திராவிடக்கட்சியின் வாரிசுகள் (எ.கா)தயாநிதி மாறன், கனிமொழி இந்தியுடன் ஆங்கிலவழிக்கல்வி பயின்றவர்கள். கருணாநிதி மற்றும் மருத்துவர் ஐயா ஆகியோரின் பேரக்குழந்தைகள் ஆங்கிலவழிக்கல்வியும் இந்தியும் படிக்கின்றனர்.
    சாதராண மக்கள் மட்டும் இந்தி படிக்க தடைவிதிக்கின்றனர்.
    இது தமிழகத்தின் சாபக்கேடு.

    ReplyDelete

நான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்