Saturday, June 16, 2012

குடியரசுத்தலைவர் நமக்கு தேவைதானா ?

பன்னிரெண்டு குடியரசுத் தலைவர்களை பார்த்து விட்ட நாம் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் யார் என்று எதிர் பார்க்கும் சூழ்நிலையில் (99.99% சதவிகிதம் பிரணாப்முகர்ஜி தான் அது ) எனக்கு ஒரு கேள்வி எழுகிறது ..இந்தியாவிற்கு குடியரசுத் தலைவர் என்ற ஒருவர் தேவை தானா ?

நம் நாட்டை பொறுத்தவரை ஒரு சில அதிகாரம் தவிர எல்லா ஆட்சி,அதிகாரமும் பிரதமர் கையிலே இருக்கிறது என்பது சாமானிய இந்தியனுக்கும் தெரியும் ..அதனால் தான் மீடியா கூட ஜனாதிபதி பற்றி தினமும் செய்தி வெளியிடுவதில்லை (அப்துல் கலாம் இருந்த காலம் தவிர்த்து )

சரி நம் நாட்டின் குடியரசுத் தலைவரின் அதிகாரம் தான் என்ன ?

 • இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க (இந்தியப் பிரதமராக பதவியேற்க) அழைப்பது.
 • அவரை பிரதம மந்திரியாக நியமித்தல்
 • பிரதம மந்திரியின் பரிந்துரைப்படி மற்ற மத்திய அமைச்சர்களை நியமித்தல்
 • தானே நாட்டை நிர்வகிக்காமல் அமைச்சரவை மூலமாக நிர்வகித்தல்(இதனால் அலங்காரத் தலைவர் எனப்பட்டார்)
 • பாராளுமன்றத்தைக் கூட்டுதல், தள்ளிவைத்தல், அதில் உரையாற்றுதல், பாராளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கையெழுத்திடல் (பிறகே அது சட்டமாகும்)
 • இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி.
கீழ்க்கண்ட பதவிகளுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.
 • மாநில ஆளுநர்.
 • உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
 • இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.
 • இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள்.
 • வெளி நாட்டுத் தூதுவர்கள்
மேலும் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ய(பிரிவு-352), பாராளுமன்றத்தின் கீழவையைக் கலைக்க, தேர்தல் நடத்த, அவசர ஆணைகள் பிறப்பிக்க, மாநில அரசைக்கலைக்க(பிரிவு-356), உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு.(நன்றி : விக்கிபிடியா)

அதே போல் குடியரசுத் தலைவர் என்பவர் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படாமல் மக்கள் பிரதிநிதிகளால் சதவிகித வாக்கு முறையில் தேர்ந்து எடுக்கப்படுகிறார் இது பற்றி மேலும் விவரம் காண சொடுக்கவும் 

நம் நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு குழப்பமான நடைமுறைகள் என்று புரியவில்லை ??
பிரதமர் தான் எல்லாம் என்று எல்லாருக்கும் தெரியும் இருந்தாலும் இந்தியாவின் முதல் குடிமகன் என்று நாம் சொல்லிக்கொள்ள நமக்கு ஒருவர் வேண்டும் 
குடியரசுத் தலைவருக்கும் சில அதிகாரங்கள் உள்ளது இருப்பினும் ஆளுங்கட்சி ஆதரவில் வந்த யாரும் அந்த அதிகாரங்களை உபயோக படுத்துவதில்லை 
(வீட்டோவை கூட யாரும் ஒழுங்காக பயன்படுத்தவில்லை )

சரி முடிவாக கேட்கிறேன் ஒரு நாட்டை ஆள ஏன் இருவர் ? அதுவும் ஒருவர் சும்மா பதவி என்ற மகுடம் மட்டும் உள்ள அலங்கார தலைவர் 
இருப்பினும் குடியரசு தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு,பயண செலவு,என்று கோடி கணக்கில் மக்களின் வரி பணத்தை செலவு செய்கிறோம் 

மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத எந்த தலைவரும் நமக்கு தேவை இல்லை என்னைக்கேட்டால் இந்தியாவிற்கு பிரதமர் ஒருவரே போதும்

இல்லை இந்தியாவிற்கு நிச்சயம் குடியரசுத்தலைவர் தேவை என்று கருதினால் குறைந்தபட்சம் அவரை மக்களாகிய நாங்கள் தேர்ந்து எடுக்கும் படி வழி செய்யக்கூடாதா???

பதிவிற்கு கொஞ்சம் சம்பந்தமான கொசுறு கொஞ்சம் ........

#இன்றைய தேதியில் மக்கள் எல்லோரும் கலாம் குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறார்கள் ஆனால் காங்கிரஸ் வேறு நினைக்கிறது 

#இதற்கு நடுவில் கலைஞர் ஒரு பேட்டியில் "கலாம்" என்றால் தமிழில் "கலகம்" என்று கூறியுள்ளார் ..தலைவா "கலாம்" என்று தமிழில் சொல்லே கிடையாதே அது அரேபிய சொல் .."கலாம்" என்பது இந்தியர்களின் நெஞ்சில் குடியிருக்கும் சொல் 

#இந்திய சட்டதிட்டதை நானும் மதிக்கிறேன் இருந்தாலும் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்ற ஒரு அற்ப ஆசையில் தான் இந்த பதிவு எழுதியுள்ளேன் ..

1 comment:

நான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்