Friday, June 8, 2012

அகிம்சை என்பதே பொய்


உங்களில் யாராவது சாகும் வரை அகிம்சையை கடைபிடித்து விட முடியுமா ? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டிக் கொண்டா இருப்பீர்கள் ?

அகிம்சை என்று நமக்கு போதித்து போதித்தே எல்லா பிரச்சனையையும் சகித்துக் கொள்கிறோம் .குப்பை கூடத்தில் உட்கார்ந்து துர்நாற்றத்தை சகித்துக் கொள்வதை விட குப்பையை சுத்தம் செய்வது தானே புத்திசாலித்தனம்

ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள் அகிம்சை என்று நமக்கு சொல்லிக் கொடுத்தவர்களால் தான் மிகப்பெரிய கலவரமே நடந்தேறியிருக்கிறது
நாம் அகிம்சையை புரிந்து கொள்ளவேயில்லை.

ஒருவன் அடித்தால் , அடக்குமுறையை ஏவினால் ,ஏகாப்தியம் செய்தால் வாயை பொத்திக்கொண்டு,வீட்டில் உட்கார்ந்து இருப்பதும்,சாம்பார் சாதம் சாப்பிடுவதையுமே அகிம்சை என்று கருதுகின்றனர் பலர்

ஒருவன் உன்னை அடித்தால் கோபம் வருவது இயல்பு தானே .அவனிடம் அடங்கி போனால் “வலிமையானவன் ஆழ்வான்” என்பதைத் தானே நீ ஏற்றுக்கொள்கிறாய்

உன் உரிமைகளை பெற ஒரு நாளும் போராட மாட்டாயா?? அகிம்சை என்பதை தப்பாக புரிந்து கொண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தாயானால் நீ செத்த பிறகும் கூட உனக்கு நியாயம் கிடைக்காது !
அகிம்சை என்பதே பொய் !! ஏனென்றால் மனித மனத்தின் கோபத்தை ஏமாற்றி பூசிமொழுகி உன்னை ஆட்சி செய்ய பயன்படுத்தும் சொல்லே அகிம்சை

அகிம்சை நம்மை புரிந்து கொள்ளாது நாமும் அகிம்சையை புரிந்து கொள்ளப் போவதில்லை.எனவே அகிம்சை என்று வாய் கிழிய கத்துவதை(?!) விட சுற்றத்தார் அனைவர் மீதும் அகந்தையற்ற அன்பு செலுத்துங்கள் போதும் !
#அன்பை போன்றதோர் போர் தான் உலகில் அதிகம் காயம் தரும்

2 comments:

  1. நல்ல பதிவு சகோ.
    கோபப்படவேண்டிய நேரத்தில் கோபப்படாதவன் கழுதையைப் போன்றவன் என்று அறிஞர் 'ஷாஃபிஈ' கோபப்பட்டுக் கூறுவார்.
    அவர் சொல்வது சரிதான். ஆனால் என்னுடைய கருத்து: அவன் கழுதையை விட மழுங்கியவன். கழுதை கூட கோபப் பட வேண்டிய நேரத்தில் கோபப்பட்டு உதைக்கிறது. எனவே இவனை கழுதையோடு ஒப்பிட்டால் கழுதைகூட கோபப்படும்.

    ReplyDelete
  2. தங்களின் ஆழமான கருத்திற்கு மிக்க நன்றி சகோ ..உண்மையே சகோ கோபப்படதாவன் கழுதையினும் கீழானவன் ....

    ReplyDelete

நான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்