Sunday, April 29, 2012

எத்தனை காலம் தான் ஏமாறுவாய் ??

கடவுள் நாளை வருகிறார் ..
கதவை திற கடவுள் வருவார் ...
எத்தனை வசனங்கள் நம்மை ஏமாற்ற ??
ஒரு ஆன்மீகவாதியிடம் செல்லுங்கள் உங்களிடம் அவர் சொல்லும் முதல் வார்த்தை என்ன தெரியுமா ? வாழ்க்கை ஒரு மாயை ...வாழ்க்கை மாயைனா அவன் இங்க என்ன மாய உலகத்துல ம**றா புடுங்குறான் ? இதுல நம்ம ஆனந்தமா இல்லைனு வேற சொல்லுவான் ...இது எப்படி தெரியுமா? நோயை பரப்பிவிட்டு மருந்து விற்கும் உத்தி தான் .."நீ சந்தோசமா இல்ல என்ட வா சந்தோசமா ஆகிறலாம் "
நான் உங்களை ஆன்மீகவாதிகளை நம்பாதீர்கள் என்று சொல்லவில்லை "போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் " அவ்வளவு தான்

அப்படியே ரவுண்டு அடுச்சு இன்னொரு பக்கம் பார்த்தா
"அவனை கொன்றுவிடு சொர்கத்தில் இடம் உண்டு "என்ற பிரசாரம் ஒரு பக்கம் நடக்கிறது ..தெரியாமல் கேட்கிறேன் அப்படி பார்த்தால் சொர்கத்தில் கொலை குற்றவாளிகள் தானே இருக்க வேண்டும் ???

இன்னொரு பக்கம் ஆண்டவன் உங்களை பாதுகாப்பார் அவரிடம் ஐக்கியம் ஆகுங்கள் என்று ஒரு பிரசாரம் நடக்கும் ..

அய்யா சாமி நான் மதங்களை குற்றம் சொல்லவில்லை மதங்களை தங்கள் இஷ்டத்துக்கு எத்த மாதிரி வளைத்துக்கொள்ளும் மனிதர்களை தான் குற்றம் சொல்கிறேன் ..

கடவுள் இல்லை என்றும் சொல்லவில்லை அவர் ஒருவர் தான் என்ற போது  அவருக்கு ஏன் நாம் பெயர் வைத்து பிரித்து பார்க்க வேண்டும் ?
அவர் நல்லவர் தான் அதான் நம்ம பண்ற அட்டுழியங்கள் எல்லாம் பொறுத்துக்கொள்கிறார்
முடிவாக கேட்கிறேன்
எத்தனை காலம் தான் ஏமாறுவாய் ??

பின் குறிப்பு : ஏமாறுபவன் இல்லை என்றால் ஏமாற்றுபவன் இருக்க மாட்டன்

1 comment:

  1. nice post nadi dont stop writing

    somberiya iruku name poda athan anonymous unga frnd than

    ReplyDelete

நான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்