இந்தியாவில் 50 சதவிகித மக்கள் கழிவறையை பயன்படுத்துவதில்லை என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல்.உலகிலே சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடம் கழிவறை தான் ,சகல நோய்களின் பிறப்பிடம் அது தானே ..
நம் வீட்டு கழிவறையை பரவலாக சுத்தமாக வைத்துக்கொள்வோம் . சில சோம்பேறிகள் அதை கழுவ கூட பணியாளர் வைத்திருப்பர்.அது ஒரு புறம் இருக்க பொது கழிவறைக்குள் நம்மால் நுழைய கூட முடியாத பரிதாப நிலை தான் உள்ளது
நீங்கள் மேற்கண்ட புகைப்படங்கள் எல்லாம் மதுரை பெரியார் நிலையத்தில் உள்ள நவீன(?) கழிவறையில் எடுத்தது (நானே தண்ணி ஊத்திட்டு தான் எடுத்துருக்கேன் )
UPDATE : தற்போது மேல் குறிப்பிட்ட கழிப்பறையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது
நம் வீட்டு கழிவறையை பரவலாக சுத்தமாக வைத்துக்கொள்வோம் . சில சோம்பேறிகள் அதை கழுவ கூட பணியாளர் வைத்திருப்பர்.அது ஒரு புறம் இருக்க பொது கழிவறைக்குள் நம்மால் நுழைய கூட முடியாத பரிதாப நிலை தான் உள்ளது
![]() |
கேவலமான கழிவறை |
![]() |
ஓட்டை கதவுகள் |
![]() |
பாசனம் பிடித்த குழாய்கள் |
![]() |
தண்ணியே வராத கை கழுவுமிடம் |
![]() |
புறத்தோற்றம் |
மலம் கழிக்க நான்கு ரூபாயும் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாயும் வக்கனையாக வாங்கும் அவர்கள் அதை பராமரிப்பதே இல்லை அவர்கள் மட்டுமல்ல நிறைய இடத்தில் இதே அவல நிலை தான்
இன்னும் ஒரு ஆண்டுக்குள் அந்த கழிவறையின் Service Tank உடைந்து போகும் நிலைமையில் நீர் வடிந்து கொண்டு இருக்கிறது
இது போன்ற பொது கழிவறைகளை பயன்படுத்தும் மக்களும் அதை ஒழுங்காக பயன்படுத்துவதே இல்லை
அரசும் இதை கண்டு கொள்ளாது ,நாமும் மூக்கை பொத்திக்கொண்டு போய் விடுவோம் பிறகென்ன தேவதூதரா வந்து நம் கழிவறைகளை சுத்தம் செய்வார் ??
மனிதன் சாக்கடையில் "பீ" அள்ளும் அவலம் இன்றும் தொடரத்தானே செய்கிறது .மதுரை போன்ற பெருநகரத்திலே (?!) இது போன்ற நிலைமை என்றால் கிராமப்புறங்களில் இருக்கும் கழிவறைகளின் நிலைமை ??
ரயிலில் உள்ள கழிவறை பற்றி தனி பதிவே எழுதலாம் அந்த அளவு மோசம் .
மலம் , சிறுநீர் கழித்த பின்பு எத்தனை பேர் சோப்பு போட்டு கை கழுவுகிறீர்கள்?கையை கழுவும் பழக்கமாவது இருக்கிறதா ??
"சுத்தம் சோறு போடும் " ,"சுத்தம் தெய்வத்திற்கு சமம் " சொல்பவர்களே நம் கழிவறையில் சாத்தான் கூட வந்து இருக்காது
#ரோட்ல ஒன்னுக்கு போற நமக்கு எதுக்கு பாஸ் இதெல்லாம் என எவனாவது கேட்டால் அவனை செருப்பால் அடி
UPDATE : தற்போது மேல் குறிப்பிட்ட கழிப்பறையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது
Tweet | |||||
உங்கள் கோபம் நியாயமானது. திருந்துபவர்கள் திருந்த வேண்டும். நன்றி சார் !
ReplyDelete