Thursday, June 14, 2012

நித்யானந்தா என்ற கேலிக்கூத்து

*இது வரை நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை இருப்பினும் காலத்தின் கட்டாயம் கருதி இந்த பதிவை எழுதுகிறேன் *

முதலில் சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

*கடவுள் மனித உருவில் அவதரிக்க மாட்டார்
*யோகா என்பது குரு சிஷ்ய முறையில் மட்டுமே கற்றுக்கொடுக்க முடியும்
*யோகிகள் யாரும் தற்பெருமையோ,விளம்பரமோ தேடுவதில்லை
*நித்யானந்தா ஒன்றும் யோகி இல்லை

இப்போது பேசலாம்,
தன்னை விஷ்ணு,சிவன் இவர்களின் அவதாரம் என்று அறிவுத்துக்கொண்டு யோகா வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த நித்யானந்தா குமுதம் இதழில் சரளகம்சம்,முக்தி என்று பல்வேறு கோணத்தில் எழுத ஆரம்பித்தார் ...நம் மக்களை பற்றி தான் நல்லாவே தெரியுமே வேப்பமரத்தில் பால் வடிந்தாலே அது தெய்வத்தின் செயல் என்று நம்பும் மூடர்கள்..நித்யானந்தாவும் இதான் சாக்கு என்று கதை கதையாய் அளந்து விட்டார் ..நம் மக்களும்..ஆகா ஒளி வந்து விட்டது என் வாழ்வில் வழி வந்து விட்டது என்று நித்யானந்தா மடத்திற்கு பணத்தை வாரி இறைத்தனர்..ஆயிரம் கோடி அளவில் அவர் சொத்து சேர்க்க ஆரம்பித்தார் ..போர போக்கில் இரண்டு பள்ளி நான்கு மருத்துவமனைகள் திறந்து நான் பொது சேவை செய்யவே பிறந்துள்ளேன் என்றும் தன்னை விளம்பர படுத்திக்கொண்டார்

இங்கே உங்களுக்கு நான் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும் ..நித்யானந்தா எழுதிய ,பேசிய விஷயங்கள் எல்லாமே ஏற்கனவே ஓஷோ என்பவர் பேசிவிட்டார் ..அவரோட பேச்சுக்கள் ,பகவத் கீதையின் சில பக்கங்கள் என்பதே நித்யானந்தா என்ற முட்டாளை மக்களிடம் அறிவாளியாக காட்டியது ..சாதாரண மக்கள் மட்டுமல்ல கடைந்து எடுத்த அறிவாளி பட்டாளமும் அவர் பின்னால் சென்றது தனிக்கூத்து

பிறகு ரஞ்சிதா என்னும் சினிமா நடிகையோடு நித்யானந்தா உல்லாசமாக இருந்தார் என்று சன் டிவியில் ஒரு நாள் முழுக்க அந்த நீல படம் ஓடிய பிறகே பாதி மக்கள் கழன்று கொண்டனர் ..

கொஞ்ச நாளில் அந்த வழக்கும் ரஞ்சிதாவின் அந்தர் பல்டியால் நீர்த்துப் போனது ..அப்புறம் மதுரையின் இளைய ஆதீனம் என்ற பட்டம் சூட்ட பட்டவுடன் மக்களுக்கு இன்னொரு முறை "டைம் பாஸ்" ஆனது

தற்போது பத்திரிக்கைகாரர்களை அடித்தார் , பாலியல் குற்ற சாட்டு என வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆளு காணாமல் போய் பிறகு அவரே பெங்களூர் கோர்டில் சரணடைந்து கோர்ட் காவலில் வைக்கப்பட்டு ஒரே நாளில்  ஜாமீனில் வந்துள்ளார்

நம் மக்களிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் சில
*நித்யானந்தா உங்களை ஏமாற்றினாரா இல்லை நீங்களாக போய் தானே ஏமாந்தீர்கள் ?
*ஏன் இந்த காலத்திலும் அற்ப வித்தைகளை நம்பி எமாறுகீர்கள் ?
*கடவுள் மனிதனாய் பிறக்க முடியும் என்றால் முதல் கடவுள் நீங்கள் தான் என்று ஏன் புரிந்துகொள்ள மறுக்குறீர்கள்
*நித்யானந்தா மட்டுமல்ல ஏற்கனவே பல போலி சாமியார்கள் வந்தும் ஏன் முட்டாளாகவே வாழ ஆசைப்படுகிறீர்கள் ?


#நித்யானந்தா மட்டுமல்ல எல்லா சாமியார்களும் போலியே 
7 comments:

 1. ஏமாத்துறவங்க இருக்கிற வரையில் ஏமாறுவது மிக சுலபமே.

  ReplyDelete
 2. சாமியார்கள், புரோகிதர்களின் செய்கைகளை அரசு கவனம் செல்லுத்த வேண்டும்.புரோகிதம் ஒழிய மனித நேயம் வளரும்

  ReplyDelete
 3. சாமியார்கள், புரோகிதர்களின் செய்கைகளை அரசு கவனம் செல்லுத்த வேண்டும்.புரோகிதம் ஒழிய மனித நேயம் வளரும்

  ReplyDelete
 4. சாமியார்கள், புரோகிதர்களின் செய்கைகளை அரசு கவனம் செல்லுத்த வேண்டும்.புரோகிதம் ஒழிய மனித நேயம் வளரும்

  ReplyDelete
 5. in every human there is A GOD. If we can not identify it people like Nithiyananda will take religion in their hand and they will make idiotic people to dance according to their tune.So people should come out from their blind beleives.

  ReplyDelete
 6. மு.நாட்ராயன்July 15, 2012 at 12:52 AM

  இந்த நித்தியானந்த விஷயம் எனக்கு இதுவரை என்ன என்றே புரியவில்லை. இவரும் தான் நிரபராதி என்று போராடுகிறார். யார் மீது தவறு.இந்த நிலையில் மதுரை ஆதீனம் வேறு இவரை தலைவராக போட்டுள்ளார். எல்லாம் மர்மமாக உள்ளது!!! ஆண்டவா இதற்கு என்ன விடை?

  ReplyDelete

நான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்